முழுநாட்டினையும் உள்ளடக்கும் வகையில் சிறுநீரக நோயினை உடைய குறைந்த வருமானத்தினைக் கொண்ட சிறுநீரக நோயாளர்களுக்கு ரூபா. 10,000/- மாதாந்த வாழ்வாதார உதவியொன்றினை வழங்குவது இத்திட்டத்தின் கீழ் இடம்பெறுகின்றது. இதுவரையில் 53,267 பேருக்கு இக்கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகின்றது
பூர்த்தி செய்யப்பட வேண்டிய தகைமைகள்.
- சிறுநீரக நோயாளி ஒருவர் என்பதை உறுதிப்படுத்தும் அரச மருத்துவரின் பரிந்துரை.
- குடும்பம் குறைந்த வருமானத்தினைக் கொண்டதாக இருத்தல்.
விண்ணப்பிக்கும் முறை
தங்களுக்கு உரித்தான பிரதேச செயலகத்தின் சமூக சேவைகள் உத்தியோகத்தர் ஊடாக உரிய விண்ணப்பப்படிவத்தினைப் பெற்று பூர்த்தி செய்து மருத்துவ அறிக்யைுடன் உரித்தான செயலகத்தில் சமர்ப்பித்தல் வேண்டும்.

